இந்தியாவில் அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை: 5வது இடத்திற்கு முன்னேறியது எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையில் இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக உருவாகியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் விற்பனை
இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனையும் இந்தியாவில் வேகமெடுத்து வருகிறது.
இந்தியாவில் மலிவு விலைக்கான ஸ்மார்ட்போன் சந்தையில் கொரியாவின் சாம்சங் மற்றும் சீனாவின் சியோமி ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், பிரீமியம் பிரிவு ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
Apple Store BKC Mumbai
இதனிடையே சீனாவின் மீதான நம்பிக்கையை குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனம், தங்களது நேரடி விற்பனை கடைகளை முதல் முறையாக இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லிக்கு மாற்றியது.
CNBC செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட Counterpoint Research அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் ஐபோன் விற்பனை ஆண்டுக்கு 50 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஐபோன் விற்பனை 2023ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் மட்டும் 4 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த ஆண்டு 3.4 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
5வது இடத்தில் இந்தியா
இந்நிலையில் Counterpoint Research அறிக்கையின் அடிப்படையில் உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு விநியோகம் மற்றும் விற்பனை அத்துடன் இந்தியாவில் சந்தைப்படுத்தல் தளங்களில் ஆப்பிள் நிறுவனம் செலுத்திய அதிக கவனம் காரணமாக இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் நான்கு இடங்களில் இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 15 சதவிகிதமும், 10 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலர் வருவாய் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |