சிக்கல் என்றால் கப்பலுடன் மாலுமிகளைக் கைவிடும் இந்தியா... உலகிலேயே முதலிடம்
இந்தியாவில் இருந்து கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் சிக்கலில் சிக்கிக் கொண்டால், கப்பலுடன் அந்த மாலுமிகளையும் கைவிடுவதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
3,133 மாலுமிகள்
உலகளவில் வணிகக் கப்பல்களின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களை வழங்குவதில் உலகிலேயே இரண்டாமிடத்தில் இருக்கும் நாடு இந்தியா.
ஆனால், சிக்கல் என்றால், அந்த மாலுமிகளையும் ஊழியர்களையும் மொத்தமாகக் கைவிடுவதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
2024ல் உலக அளவில் 312 கப்பல்களும் 3,133 மாலுமிகளும் இவ்வாறு கைவிடப்பட்டத்தில், இந்தியர்கள் மட்டும் 899 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஊழியர்கள் உட்பட 14 பேர்களுடன் மால்டோவாவிலிருந்து துருக்கிக்கு பாப்கார்னை கொண்டு சென்ற கப்பலானது ஏப்ரல் மாதம் உக்ரைன் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
உக்ரைனில் இருந்து கொள்ளையிடப்பட்ட தானியம் அது என குற்றஞ்சாட்டிய அந்த நாடு, கப்பலை சிறைபிடித்தது. நீண்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விசாரணை வட்டத்தில் இல்லாததால், அவர்கள் வெளியேறலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த ஐந்து மாதங்களும் கப்பல் உரிமையாளர்களால் சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன், அந்த தொகை மட்டும் 102,828 டொலர் என்றே கூறப்படுகிறது. வெளியான தரவுகளின் அடிப்படையில் தற்போது அந்த கப்பல் மற்றும் ஊழியர்களை அந்த நிர்வாகம் கைவிட்டுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
பலவீனமான கப்பல் விதி
பலவீனமான கப்பல் விதிகளைக் கொண்ட நாடுகளில் பதிவு செய்யப்படும் கப்பல்களே பெரும்பாலும் அதன் நிர்வாகத்தால் கைவிடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பாவி ஊழியர்களுக்கு இப்படியான தரவுகள் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
இந்தியருக்குச் சொந்தமான நிர்வாணா என்ற கப்பலில் கேப்டன் பிரப்ஜீத் சிங் என்பவர் பணிபுரிந்தார். குராக்கோ கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பல் இது. 22 இந்திய ஊழியர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.
நிர்வாணா கப்பல் சமீபத்தில் ஒரு புதிய உரிமையாளருக்கு விற்கப்பட்டது, அவர் புதிதாக பதிவு செய்ய விரும்பினார், இதனால் ஊழியர்கள் அனைவரின் சம்பளமும் புதிய மற்றும் பழைய உரிமையாளர்களிடையே சர்ச்சையில் சிக்கியது.
சில நாட்களிலேயே தாங்கள் கைவிடப்பட்டுள்ளது தெரியவர, உணவு மற்றும் எரிபொருள் இல்லாமல் நிர்வாணா நடுக்கடலில் சிக்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்பட்ட சமரசத்திற்குப் பிறகு, ஜூலை 7 ஆம் திகதி குழுவினர் இறுதியாகக் கப்பலில் இருந்து இறங்க முடிந்தது. ஆனால் சம்பளத்திற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |