அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் துணைக் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி
சூர்யகுமார்(கேப்டன்) ருதுராஜ்(துணை கேப்டன்), இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ், சுந்தர், அக்ஸர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப், ப்ரஷித், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
உலக கோப்பை தொடருக்கு பிறகு, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, சமி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |