இந்தியாவுக்கு அடிமேல் அடி! 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
Thiru
in கிரிக்கெட்Report this article
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய இந்திய துடுப்பாட்ட வீரர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 27 ஓட்டங்கள், சுப்மன் கில் 7 ஓட்டங்கள், சாம்சன் 7 ஓட்டங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் 1ஓட்டம் எடுத்து இருந்த நிலையில் அடுத்து அடுத்து களத்தில் இருந்து வெளியேறினர்.
திலக் வர்மா மட்டும் நிலைத்து நின்று விளையாடி 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51 ஓட்டங்கள் எடுத்து இருந்தார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு 18 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 24 ஓட்டங்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் குவித்தது.
நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன்
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் ரன் எதுவும் அடிக்காமல் ஹர்திக் பாண்டியா பந்தில் களத்தை விட்டு வெளியேறினார்.
அடுத்தடுத்து வந்த கைல் மேயர்ஸ்(15), ஜான்சன் சார்லஸ்(2), ரோவ்மேன் பவல்(21) மற்றும் ஹெட்மயர்(22) என்ற சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 67 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்மூலம் 2வது டி20 போட்டியிலும் இந்திய அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |