மண்ணை கவ்விய இந்திய அணி..!4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி
இந்திய கிரிக்கெட் அணியுடனான முதலாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
முதல் டி20 போட்டியானது தாரூபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியமில் இன்று நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிகள் பொறுத்தவரை பூரன் 34 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களும், கேப்டன் ரோவ்மேன் பவல் 32 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும் பொறுப்புடன் குவித்து இருந்தனர்.
AFP
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் குவித்து இந்திய அணிக்கான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
மண்ணை கவ்விய இந்திய அணி
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்து இருந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
இவர்களை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ்(21),ஹர்திக் பாண்டியா(19),சஞ்சு சாம்சங்(12) மற்றும் அக்சர் படேல்(13) ஆகிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இந்திய அணியை பரிதாபமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இளம் வீரர் திலக் வர்மா மட்டும் தன்னுடைய பங்கிற்கு 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 39 ஓட்டங்கள் சேர்த்து ரசிகர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணிகள் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
West Indies win the first #WIvIND T20I.#TeamIndia will look to bounce back in the second T20I in Guyana. ? ?
— BCCI (@BCCI) August 3, 2023
Scorecard ▶️ https://t.co/AU7RtGPkYP pic.twitter.com/b36y5bevoO
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய முன்னிலை கணக்கை தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |