கடைசி பந்தில் பவுண்டரி! பாகிஸ்தான் U19 அணியை வீழ்த்தி மகுடம் சூடிய இந்தியா U19
India u19 win 9th asia cup title: ACC ஆடவர் U19 ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் U19 அணியை வீழ்த்தி இந்தியா U19 மகுடம் சூடியது.
அல் அமீரத்தில் நடந்த பாகிஸ்தான் U19 அணிக்கு எதிரான ACC ஆடவர் U19 ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில், இந்தியா U19 அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டி
இந்திய U19 மற்றும் பாகிஸ்தான் U19 அணிகளுக்கு இடையிலான ACC ஆடவர் இறுதிப்போட்டி அல் அமீரத்தில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் U19 அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. உஸ்மான் கான் (Usman Khan) 107 (111) ஓட்டங்களும், அப்துல் காதிர் 84 (54) ஓட்டங்களும், அணித்தலைவர் ஃபர்ஹான் யூசுப் 63 (60) ஓட்டங்களும் விளாசினர்.
இந்திய அணியின் தரப்பில் காவ்யா பட்டேல் 4 விக்கெட்டுகளும், சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளும், அர்ஜுன் ராஜ்புத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கடைசி பந்தில் வெற்றி
பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா U19 அணியில், தொடக்க வீரர்களான ஆர்யவீர் சேவாக் 58 (61) ஓட்டங்களும், லக்ஷயா ராஜேஷ் 80 (101) ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, மனல் சௌகன் அதிரடியாக 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி கட்டத்தில் போராடிய மோஹித் உல்வா (Mohit Ulva) சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி வென்ற 9வது ACC ஆடவர் U19 ஆசிய கிண்ணம் இதுவாகும்.
