பிரித்தானியா-இந்தியா இடையே 468 மில்லியன் டொலர் ஏவுகணை ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே 468 மில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) முதல்முறையாக இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே 468 மில்லியன் டொலர் (350 மில்லியன் பவுண்டு) மதிப்பிலான முக்கியமான மதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்திய இராணுவத்திற்கு பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் லைட்வெயிட் மல்டிரோல் ஏவுகணைகள் (LMM) வழங்கப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் விமான பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில், 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் அடிப்படையில், தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இது இந்தியா-பிரித்தானியா இடையேயான சிக்கலான ஆயுதங்கள் தொடர்பான நீண்டகால ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்தில் 700-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் தற்போது உக்ரைனுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன.
ஏவுகணைகளுடன் இணைந்து, இந்தியா மற்றும் பிரித்தானிய கடற்படைக்கு மின்சார இயந்திரங்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பு செய்யும் புதிய Implementing Agreement ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
இது இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும்.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே வணிக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India UK missile deal, India UK Martlet missile deal, Martlet missile India, Keir Starmer India visit, UK-made LMM missiles India, India UK strategic partnership, Atmanirbhar Bharat