4 புதிய விசா வகைகளை அறிமுகம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 4 புதிய விசா வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்காக நான்கு புதிய விசா வகைகளை UAE அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை செயற்கை நுண்ணறிவு (AI), பொழுதுபோக்கு (Entertainment), நிகழ்வுகள் (Event) மற்றும் கிரூஸ் சுற்றுலா (Cruise Tourism) ஆகும்
புதிய விசா வகைகள்
1- Artificial Intelligence (AI) Specialist Visa
இந்த AI நிபுணர் விசா தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு கடிதத்துடன், ஒருமுறை அல்லது பலமுறை அமீரகத்திற்கு வர அனுமதிக்கும். இது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
2- Entertainment Visa
இந்த பொழுதுபோக்கு விசா சினிமா, இசை, கலை நிகழ்ச்சிகள் போன்ற துறைகளில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கானது.
3- Event Visa
மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்கான விசா.
4- Cruise Tourism Visa
கப்பல் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கான விசா.
மற்ற விசா மாற்றங்கள்
இவற்றை தவிர, வணிக மற்றும் லொறி ஓட்டுநர் விசாக்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும்,மனிதாபிமான உதவிக்காக, விதவை மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள், அமீரக குடியிருப்பாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான குடியிருப்பு விருப்பங்களும் விரிவாக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UAE new visa categories, AI specialist visa UAE, UAE entertainment visa, UAE event visa, UAE cruise tourism visa, UAE residency changes, UAE humanitarian visa, UAE visa for widows and divorcees, UAE visa for relatives and friends, UAE immigration policy