இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் எந்த பொருட்களுக்கு விலை குறையும்?

United States of America India
By Karthikraja Feb 07, 2026 06:26 AM GMT
Report

இந்தியா- அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதித்தார். 

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் எந்த பொருட்களுக்கு விலை குறையும்? | India Us Interim Trade Deal What Benefit For India

தற்போது இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக படிப்படியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்தியா மீதான வரியை டிரம்ப் 18% ஆக குறைத்துள்ளார். 

கோவில்களில் குவியும் கோடிகள் - இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள கோவில்கள்

கோவில்களில் குவியும் கோடிகள் - இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள கோவில்கள்

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியர்களுக்கு 30 ட்ரில்லியன் டொலர் அமெரிக்கா பொருளாதார சந்தை திறக்கப்பட உள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பொருட்களுக்கு வரி குறையும்?

ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் ஆகிய இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா பரஸ்பர 18% வரி விதிக்கும். 

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் எந்த பொருட்களுக்கு விலை குறையும்? | India Us Interim Trade Deal What Benefit For India

அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், உலர் தானியங்கள், கால்நடை தீவனத்துக்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயா எண்ணெய், ஒயின், மதுபானங்கள் உட்பட அமெரிக்காவின் பல விவசாய மற்றும் உணவு பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கும் அல்லது நீக்கும்.

இந்த இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொதுவான மருந்துகள், வைரங்கள் மற்றும் நகைகள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல இந்திய தயாரிப்புகளுக்கு வரிகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், அமெரிக்கத் தரநிலைகள் மற்றும் சோதனைத் தேவைகளை ஏற்றுக்கொள்வது குறித்து 6 மாதங்களுக்குள் இந்தியா முடிவெடுக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து எரிசக்தி பொருட்கள், விமானங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை 500 பில்லியன் டொலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியாதிட்டமிட்டுள்ளது.

தரவு மையங்களில் (Data centers) பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs) உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருட்களின் வர்த்தகத்தை 2 நாடுகளும் கணிசமாக அதிகரிக்கும்.

டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகளை நீக்கவும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) ஒரு பகுதியாக வலுவான டிஜிட்டல் வர்த்தக விதிகளை உருவாக்கவும் 2 நாடுகளும் முன்வந்துள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US