நிலவில் மனித தளம் - இந்தியா, அமெரிக்கா கூட்டு முயற்சி
எதிர்காலத்தில், இந்தியா, அமெரிக்கா இணைந்து நிலவில் மனித தளம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவில் தளம்
பூமியை தாண்டி நிலவில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் இந்தியாவும், அமெரிக்காவும் முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நிலவின் தென் பகுதியில் இந்தியாவின் சந்திராயன் 3 தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் பகுதியில் முதல் மென்மையான தரையிறக்கம் செய்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்த பகுதியில் பனி வடிவில் நிலவில் நீர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ககன்யான் திட்டம் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
இதே போல், அமெரிக்கா ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் முதல்முறையாக மனிதர்களை நிலவை சுற்றி வர செய்துள்ளது.

மேலும், இது ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவில் தரையிறக்கம் செய்வதற்கான முன்னோடி திட்டம் ஆகும்.
சந்திராயன் 3 மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளை ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளது.
இவ்வாறாக நிலவு தொடர்பான ஆய்வில் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து நிலவில் தளம் அமைக்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |