இஸ்ரேல் எதிராக வாக்களித்த இந்தியா: ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட முக்கிய தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.
இஸ்ரேலுக்கு இந்தியா எதிர்ப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல்கள் ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்து வரும் நிலையில், போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் கோலன் குன்றுகள் ஆகிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா வில் கடந்த வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்தன, 7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன, 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல்கள் நிறுத்துவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |