இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்: நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி அறிவிப்பு
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா- இந்தியா மோதல்
இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
காயத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் 70 ஓட்டங்களும் குவித்து இருந்தார்.
This is absolutely shocking!
— The Cricket Podcast (@TheCricketPod) February 9, 2023
Jadeja is quite clearly applying a magic potion to his finger here, which has tricked the Australian's into forgetting they can use their bats.
12 month ban. Now. #AUSvINDpic.twitter.com/dukRDR1sni
மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார், ரவீந்திர ஜடேஜாவின் இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.
ஜடேஜாவுக்கு அபராதம்
இந்நிலையில் நாக்பூரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகள் லெவல் 1ஐ மீறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜடேஜாவின் ஒழுங்குமுறை சாதனையில் குறைபாடு புள்ளி ஒன்றும் சேர்க்கப்பட்டது.
ஆட்டத்தின் 46வது ஓவரின் போது ஜடேஜா தனது ஆள்காட்டி விரலில் ஒரு சூத்திங் கிரீம்(soothing cream) தடவியதை தொடர்ந்து ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.