73 வினாடிகளில் ஓவரை வீசி முடித்த ஜடேஜா: இந்திய அணிக்கு 305 ஓட்டங்கள் இலக்கு
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா முன்னிலை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஒரு பரபரப்பான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Getting us off to a flyer! 🏏💥
— England Cricket (@englandcricket) February 9, 2025
Match Centre: https://t.co/r0q6CYKXNp
🇮🇳 #INDvENG 🏴 | @BenDuckett1 pic.twitter.com/giCKlSb4Hl
இந்தியா-இங்கிலாந்து மோதல்
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டக்கெட் மற்றும் சால்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் சேர்த்தனர்.
🏏 ODI 50 # 40 🙌
— England Cricket (@englandcricket) February 9, 2025
Match Centre: https://t.co/r0q6CYKXNp
🇮🇳 #INDvENG 🏴 | @root66 pic.twitter.com/EwLGwK5Dbw
அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். டக்கெட் 65 ஓட்டங்களும், ஜோ ரூட் 69 ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 31 ஓட்டங்களும், பட்லர் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 41 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்கள் குவித்தது.
The Jaddu Puzzle!
— Chennai Super Kings (@ChennaiIPL) February 9, 2025
Jaddu bowls one over in 7️⃣3️⃣ seconds!
He gets 3️⃣ wickets by conceding just 3️⃣5️⃣ runs in 🔟 overs!
Calculate the awesomeness level of Jadeja.
Clue: It’s his jersey number sideways.
Drop the answer in the comments! 🥳🔥#INDvENG #WhistlePodu 🦁💛 @imjadeja pic.twitter.com/Yf3ZRr3Aam
ஜடேஜா அசத்தல்
இந்த போட்டியில் சிறப்பான பந்துவீசிய இந்திய வீரர் ஜடேஜா 10 ஓவர்களில் 35 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மேலும் ஆட்டத்தின் 24வது ஓவரை வீசிய ஜடேஜா வெறும் 73 வினாடிகள் ஓவரின் 6 பந்துகளை வீசி முடித்தார்.
Captain @ImRo45 leads from the front with a blistering half-century!
— Star Sports (@StarSportsIndia) February 9, 2025
📺 Start watching FREE on Disney+ Hotstar ➡ https://t.co/1Z9DlYa3MT#INDvENGOnJioStar 2nd ODI 👉 LIVE NOW on Disney+ Hotstar & Sports 18-1! pic.twitter.com/sCKw4TxLfz
73 வினாடிகள் ஒரு ஓவரை வீசி முடித்து புதிய சாதனை ஒன்றையும் ஜடேஜா படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ட்டங்கள விளையாடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |