கலங்கடித்த பாஷீர்! 307 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: இங்கிலாந்து முன்னிலை
ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
India vs England 4th Test
இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
முதல் 2 நாட்களின் ஆட்டத்தைத் தொடர்ந்து, இன்று இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 219/7 என்ற நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்து வந்தனர்.
குறிப்பாக, பாஷீர்(Shoaib Bashir) என்ற இளம் பந்துவீச்சாளர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட, இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
சரிவில் இருந்த மீட்ட துருவ் ஜூரல்(Dhruv Jurel)
இந்திய அணி சீர்குலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனித்து நின்று சிறப்பான ஆட்டத்தை இளம் வீரர் த்ருவ் ஜுரேல் வெளிப்படுத்தினார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 149 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்தார். குல்தீப் யாதவ்வுடன் இணைந்து 42 ஓட்டங்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India vs England 4th Test,
India vs England Test series,
Cricket Test match,
Ranchi Test match,
India batting collapse,
England takes lead,
Who will win the 4th Test?,
Cricket highlights,
Live cricket score,
Cricket news,