தென்னாப்பிரிக்க அணியை சூறையாடிய சிராஜ்: 55 ஒட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆட்டத்தை இழந்துள்ளது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பெவுமா பதில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் விளையாடுகிறார்.
ஜெரால்ட் கோயிட்சே காயம் காரணமாக வெளியேறி இருப்பதால் அவருக்கு பதில் கேசவ் மஹாராஜ் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவும் சர்துல் தாக்கூருக்கு பதில் முகேஷ் குமாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ்
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி ஏற்படும் விதமாக முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து 2, 4, 2, 3, என ஒன்றை இலக்க ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக Kyle Verreynne 15 ஓட்டங்கள் குவித்தார். 23.2 ஓவர்கள் முதல் இன்னிங்ஸில் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்துள்ளது.
இந்திய அணியின் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mohammed Siraj, Rohit sharma, mukash kumar, jasprit bumrah, Indian Cricket Team, South Africa Cricket team, Cricket