முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் அடித்த தமிழக வீரர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
116 ஓட்டங்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். தென்னாப்பிரிக்க அணியில் அதிகப்பட்சமாக Tony de Zorzi 28 ஓட்டங்களையும், Phehlukwayo 33 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.
W W W W W! 🔥
— Star Sports (@StarSportsIndia) December 17, 2023
A record-breaking spell from #ArshdeepSingh as he becomes the first Indian pacer to claim a fifer in South Africa! 🙌🏻
Tune-in to the 2nd #SAvIND ODI
DEC 19, 4.30 PM | Star Sports Network#Cricket pic.twitter.com/yPObbkgMY1
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 27. 3 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தியா வெற்றி
சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரரான ருதுராஜ் 5 ஓட்டங்களுக்கு வெளியேறி அதிர்ச்சி தந்தார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
Growing up as a small kid like everybody I also dreamt of playing for the country. So with hardwork n grit dreams do come true. 🇮🇳
— Sai Sudharsan (@sais_1509) December 17, 2023
Blessed to represent the country and contribute for the team. Looking forward to lots of memories. ✨
Special to receive the cap from @klrahul Bhai… pic.twitter.com/CBs24oMAaV
தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக சர்வதேச போட்டியிலேயே 55 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 52 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 16,4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 117 ஓட்டங்களை அடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |