வெஸ்ட் இண்டீஸை பொளந்துகட்டிய சூர்யகுமார்: சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கவிட்ட வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் 83 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
இந்திய அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங்கை செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தனர்.
For his breathtaking match-winning knock in the third #WIvIND T20I, Suryakumar Yadav bags the Player of the Match award ? ?
— BCCI (@BCCI) August 8, 2023
Scorecard ▶️ https://t.co/3rNZuAiOxH #TeamIndia pic.twitter.com/vFQQYFUKOC
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் குவித்து இலக்கை விரட்டி பிடித்தது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று விட்ட நிலையில், இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது தொடரை இழக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பந்துகளை பறக்க விட்ட சூர்யகுமார்
இந்த போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியூட்டும் வகையில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 1 ஓட்டத்துடனும், சுப்மன் கில் 6 ஓட்டத்துடனும் வெளியேறினர். ஆனால் பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
Destructive batting ALERT!! ?
— OneCricket (@OneCricketApp) August 8, 2023
You can't keep Suryakumar Yadav quiet for a long time ?#SuryaKumarYadav #WIvsIND #CricketTwitter pic.twitter.com/mT20ecyK4G
வெறும் 44 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சூர்யகுமார் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என விளாசி 83 ஓட்டங்கள் சிறப்பாக குவித்தார்.
இந்த போட்டியில் சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் “ஸ்கை இஸ் பேக்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |