திருப்பி அடித்த இந்திய அணி! வெஸ்ட் இண்டீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய தீவுகள்
அணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கத்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிராண்டன் கிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 42 ஓட்டங்கள் சேர்த்தார்.
அவரை தொடர்ந்து கேப்டன் ரோவ்மேன் பவல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசி 40 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்தியா அபார வெற்றி
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சி தரும் வகையில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 1 ஓட்டத்துடனும், சுப்மன் கில் 6 ஓட்டத்துடனும் வெளியேறினர்.
ஆனால் பின்னர் வந்த சூர்ய குமார் மற்றும் திலக் வர்மா ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 83 ஓட்டங்கள் குவித்தார், திலக் வர்மா 37 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 49 ஓட்டங்கள் சேர்த்தார்.
கேப்டன் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு 15 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசி 20 ஓட்டங்கள் அடித்தார்.
இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 17.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் குவித்தது.
Crease pe savdhaan aur bat ? ke saath satark ?
— JioCinema (@JioCinema) August 8, 2023
No time wasted at the crease by young Tilak! ?#WIvIND #JioCinema #SabJawaabMilenge #TilakVarma #TeamIndia pic.twitter.com/rX9htYWNoS
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் 2 மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது, ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |