இந்தியா-இலங்கை இடையே தரைவழிப் பாலம்: ஜனாதிபதி ரணிலிடம் விருப்பம் வெளிப்படுத்திய மோடி
இலங்கை இந்தியா இடையே தரைப்பாலம் அமைக்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய பிரதமர் மோடி விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
திட்டமிட்டு இருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்து நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று அவர் இலங்கைக்கு நாடு திரும்பி இருக்க வேண்டும், ஆனால் ஜனாதிபதி மீள் வருகை புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனை காரணமாக தாமதம் ஆகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையை இந்தியாவுடன் தரைவழிப் பாலம் மூலம் இணைப்பது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நகர்வை இந்த சந்திப்பின் மூலம் ஜனாதிபதி ரணிலிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படலாம்
இந்த நகர்வு இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக மாற்றிவிடும் என்று பயத்தை சிங்கள மக்களிடம் ஏற்படுத்திவிடலாம்.
இதனிடையே எதிர்காலத்தில் இலங்கை இந்தியா இடையிலான தரைவழி இணைப்பு மற்றும் எரிபொருள் பாதை ஆகியவற்றுக்கிடையிலான ஆய்வுகளின் சாத்தியக்கூறுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என மோடி இன்று பகிரங்கப்படுத்தி இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |