வான்வழி தாக்குதல் தயாராக இருக்கிறது! தாலிபான்களுக்கு இந்தியா எச்சரிக்கை
தாலிபான்கள் இந்தியா பக்கம் திரும்பினால் வான்வழித் தாக்குதல் தயாராக இருக்கிறது என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமாஜிக் பிரதிநிதி சம்மேளனத்தில் உரையாற்றிய உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
சமாஜிக் பிரதிநிதி சம்மேளனத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
இந்தியாவை எதிர்க்க எந்த நாடும் துணிவதில்லை. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் கலக்கமடைந்துள்ளன.
ஆனால், தாலிபான்கள் இந்தியா பக்கம் திரும்பினால் வான்வழித் தாக்குதல் தயாராக இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.