ஈரான் கச்சா எண்ணெய்... இந்தியாவிற்கு புதிய ஆணையிட்ட டொனால்ட் ட்ரம்ப்
இந்தியா இனி ஈரானுக்கு மாற்றாக வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா எண்ணெய்
இது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக வெனிசுலா எண்ணெய் வாங்குவதை விரைவில் மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்கா இந்தியாவிடம் கூறிய ஒரு நாள் கழித்து ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, இந்தியா தரப்பில் இருந்து வெனிசுலா நிர்வாகத்திடம் எண்ணெய் இறக்குமதி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெனிசுலா ட்ரம்ப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், உக்ரைனில் ரஷ்யாவின் போரில் நிதியளிக்கும் எண்ணெய் வருவாயைக் குறைக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், இந்தியாவிற்கு வெனிசுலா கச்சா எண்ணெயை வழங்குவதற்கான அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா உட்பட ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் 25 சதவீதம் வரிகளை விதித்தார். ஆனால் தற்போது வெனிசுலா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த 25 சதவீத வரியை நீக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
இதனிடையே, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தைக்கு தேவையான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யாவை நாடியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது வெனிசுலாவில் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என ட்ரம்ப் ஆணையிட்டுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பதில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெய் வாங்கும் இன்னொரு முதன்மை நாடான சீனாவும் வெனிசுலா எண்ணெயை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனா மீது வெனிசுலா எண்ணெய் விவகாரத்தில் அவர் அழுத்தமளிக்க மறுத்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்திலும், இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், சீனாவை வரி விதிக்காமல் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |