2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையை வென்றது இந்தியா!
சென்னையில் நடைபெற்ற 2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையில் இந்தியா வென்றது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியின் இறுதிப் போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி நான்காவது முறையாக இந்த பட்டத்தை வென்றுள்ளது.
மலேசியா இதுவரை இந்த பட்டத்தை வென்றதில்லை. இருப்பினும், அந்த அணி ஐந்து முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முதல் இரண்டு காலிறுகிப்போட்டிகளில் இந்தியாவுக்கு மலேசியா கடும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் மூன்றாவது காலிறுதியில் இரட்டை கோல் அடிக்க, இந்தியா அபாரமாக மீண்டு வந்தது.
இந்தியா சார்பில் ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியாவின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.
அரையிறுதியில் ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hero Asian Champions Trophy Chennai 2023, Asian Champions Trophy Chennai 2023, 2023 Asian Champions Trophy, Asian Champions Trophy 2023, asian champions trophy 2023 hockey, asian champions trophy 2023 Final