204 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! U19 உலகக்கிண்ணத்தில் இந்தியா அபாரம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான U19 உலகக்கிண்ணப் போட்டியில், இந்தியா 204 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
விஹான் மல்ஹோத்ரா சதம்
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான U19 உலகக்கிண்ணப் போட்டி புலவாயோவில் நடந்தது.
More scintillating strokeplay from Vihaan Malhotra after an emphatic #U19WorldCup century 👏
— ICC (@ICC) January 27, 2026
Watch the tournament LIVE, broadcast link 📺: https://t.co/jKX6xmmOJQ pic.twitter.com/Ij0Uhk8BOc
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் குவித்தது.
விஹான் மல்ஹோத்ரா (Vihaan Malhotra) ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களும், அபிக்யன் குண்டு 61 ஓட்டங்களும் விளாசினர்.
ஜிம்பாப்வே ஆல்அவுட்
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லீராய் சிவெளலா (Leeroy Chiwaula) 62 (77) ஓட்டங்கள் எடுத்தார்.
ICC/X
அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) மற்றும் உதவ் மோகன் தலா 3 விக்கெட்டுகளும், அம்ரிஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்திய அணி 204 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற, விஹான் மல்ஹோத்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ICC/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |