பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இளையோர் படை! 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
U19 ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆரோன் ஜார்ஜ் 85 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான U19 ஆசியக் கிண்ணப்போட்டி துபாயில் நடந்தது. 
முதலில் ஆடிய இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஆரோன் ஜார்ஜ் 88 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் விளாசினார். கனிஷ்க் 46 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார். 
சுருண்ட பாகிஸ்தான்
மொஹம்மது சய்யம், அப்துல் ஷுபன் தலா 3 விக்கெட்டுகளும், நிகாப் ஷாபிக் 2 விக்கெட்டுகளும், அலி ரஸா மற்றும் அகமது அஹ்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹுஸைபா அஹ்சன் 83 பந்துகளில் 70 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) குவித்தார்.
இந்திய அணியின் தரப்பில் கனிஷ்க், தீபேஷ் தலா 3 விக்கெட்டுகளும், கிஷன் குமார் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
For his fantastic all-round performance, Kanishk Chouhan is adjudged the Player of the Match 👏
— BCCI (@BCCI) December 14, 2025
India U19 register a convincing win by 9⃣0⃣ runs 👌
Scorecard ▶️ https://t.co/9FOzWb0aN7#MensU19AsiaCup2025 pic.twitter.com/CjcQ32QVUh
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |