மழையால் ரத்தான கடைசிப்போட்டி: சூர்யகுமார் தலைமையில் தொடரைக் கைப்பற்றி இந்தியா பதிலடி
தி காபாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப்போட்டி மழையால் ரத்தானதால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
மழையால் ரத்து
பிரிஸ்பேனின் தி காபா மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாட்டதை தொடங்கியது.
அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 23 ஓட்டங்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாச, இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ஓட்டங்கள் குவித்தது.
அபிஷேக் ஷர்மா தொடர் நாயகன்
அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்ததால் டி20 தொடரை கைப்பற்றியது. 
இந்தத் தொடரில் 163 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததற்கு டி20 தொடரை வென்று அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்துள்ளது. 
A well-rounded team effort 👏🏆#TeamIndia | #AUSvIND pic.twitter.com/RZI9c6QlYP
— BCCI (@BCCI) November 8, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |