கனடாவுக்கு வரப்போகிறீர்களா? இனவெறுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்: இந்தியப் பெண்ணின் கசப்பான அனுபவம்
கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் கிளப் ஒன்றிற்குச் சென்ற நிலையில், அங்கிருந்த பாதுகாவலர், இந்தியர்கள் என்பதால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியப் பெண்ணின் கசப்பான அனுபவம்
தனது தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட தனது தோழி மற்றும் நண்பர்களுடன் கிளப் ஒன்றிற்குச் சென்றுள்ளார் அந்தப் பெண்.
இருமடங்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும், இந்தியர்கள் என்பதால் தங்களை உள்ளே விடவில்லை என்றும், அங்குள்ள பாதுகாவலர் ஒருவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கும் அந்தப் பெண், இந்தியர்கள் அல்லாத மற்றவர்களை அவர் கிளப்புக்குள் அனுமதித்ததாக தெரிவிக்கிறார்.
கனடாவில் இந்தியர்களுக்கு வரவேற்பில்லை, இதுதான் உண்மை என்று கூறும் அவர், இன்னமும் கனடா வரும் விருப்பம் உங்களுக்கு இருக்கிறது என்றால், இனவெறுப்பை எதிர்கொள்ளத் தயாராக வாருங்கள் என்கிறார்.
இந்த சம்பவத்தை அவர் சமூக ஊடகம் ஒன்றில் வீடியோவாக வெளியிட, அவர் அந்த பாதுகாவலரை நோக்கி சத்தமிட்டதாகக் கூறப்படும் நிலையில், சிலர் அவருக்கு எதிராகவும், சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |