மகளிர் டெஸ்டில் 600 ரன் குவித்த முதல் அணி! புதிய வரலாறு படைத்த இந்தியா
மகளிர் இந்திய அணி 603 ஓட்டங்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
ஷஃபாலி வெர்மா 205
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 205 ஓட்டங்களும், ஸ்மிரிதி மந்தனா 149 ஓட்டங்களும் குவித்தனர்.
6️⃣0️⃣0️⃣ ?
— Women’s CricZone (@WomensCricZone) June 29, 2024
RECORDS GALORE: India - the first team to the 600-run mark in Women's Tests.
(?: BCCI) | #INDvSA pic.twitter.com/WhuVqNuJu5
புதிய சரித்திரம்
விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 86 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 69 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் 603 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி டிக்ளேர் செய்தது.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் ஒரு இன்னிங்சில் 600 ஓட்டங்கள் குவித்ததில்லை. அவுஸ்திரேலிய அணி 575 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், இந்திய அணி அந்த சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |