இறுதி போட்டியில் மழை பெய்தால் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது தெரியுமா?
T20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் மழை பெய்து, போட்டி ரத்து செய்யப்பட்டால் எந்த அணி வெற்றிப் பெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை இறுதி
முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
அதையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு மோதவுள்ளனர்.
குறித்த போட்டியில் எந்த அணி வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்து வருகிறது. அதேசமயம் மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியா இரண்டாவது கோப்பையை வென்று வரலாற்றை மாற்றி எழுதும் ஆர்வத்தில் இருக்கிறது.
அதுபோலவே தென்னாப்பிரிக்கா முதல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறது.
நடைபெற்ற அனைத்து போட்டியிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் எந்தவொரு போட்டியிலும் தோல்விபெறவில்லை.
இன்று பார்படாஸ் பிரிட்ஜ்டவுனிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் குறித்த போட்டிக்கு மழை இடையீறுகாக அமைய வாப்பபு இருப்பதாக கூறப்படுகிறது.
மழை பெய்தால் என்ன நடக்கும்?
இன்று (ஜூன் 29) மற்றும் நாளை ரிசர்வ் நாள் (ஜூன் 30) ஆகிய 2 நாட்களும் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூன் 29) நாள் முழுவதும் மழை பெய்ய 78% வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும் வாய்ப்பும் அதிகமாக காணப்படுகிறது.
அந்தவகையில் இன்று போட்டி நடைபெறவில்லை என்றாலும் ரிசர்வ் நாளான நாளை போட்டி நடத்தப்படும்.
நாளையும் மழை காரணமாக போட்டி தடைப்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |