44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி; ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதி
indian womens hockey won gold in asian game after 44 years: 44 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றுள்ளது.
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் ஹாக்கியின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் சீனா மோதியது.

நடப்புச் சாம்பியனும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.
போட்டியின் 10-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி அடித்த ரிவர்ஸ்-ஹிட் கோலே வெற்றியைத் தீர்மானித்தது.
இதன் மூலம், 44 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது.
முன்னதாக, 1982 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் எலிசா நெல்சன் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது.
மேலும், இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நேரடி இடத்தையும் இந்திய மகளிர் ஹாக்கி அணி உறுதி செய்தது.