T20 தொடரை வென்ற இந்திய அணி - உலக சாதனை படைத்த 3 இந்திய வீராங்கனைகள்
இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில், வென்ற இந்திய மகளிர் அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடரை வென்ற இந்தியா
இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் அணி, 5 போட்டி கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் , முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து, 112 ஓட்டங்கள் குவித்தது.
113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 115 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியில் வென்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்
இது இந்திய அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அணித்தலைவியாக 77வது T20 வெற்றி ஆகும். இதன் மூலம் T20 வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை 130 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, அதில் 77 போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
முன்னதாக அவுஸ்திரேலிய அணித்தலைவி மெக் லானிங், 76 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஆண்கள் டி20 கிரிக்கெட்டில், 49 வெற்றிகளுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
இதே போல், 42 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 79 ஓட்டங்கள் குவித்த ஷபாலி வர்மா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில், 13வது முறையாக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம், 22 வயதிற்கு முன்னதாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதில், 3 விக்கெட்களை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில், 1000 ஓட்டங்கள் மற்றும் 151 விக்கெட்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |