ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு அடுத்தது 2 தங்கம்! மொத்த பதக்கங்கள் 84 ஆக உயர்வு
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா 2 தங்கம் வென்றுள்ளது.
இந்தியாவின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் தீபிகா பல்லிக்கல் - ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்ஃபா பிண்டி அஸ்மான் - முகம்மது சியாஃபிக் பின் முகத் கமல் ஜோடியை எதிர்கொண்டது.
PTI
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 8-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்கள் வில்வித்தை இறுதிப் போட்டியில் சீன தைபேவை 230-228 என்ற கணக்கில் இந்தியாவின் ஜோதி, அதிதி மற்றும் பர்னீத் ஜோடி வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
Twitter
இதே போல் ஆடவர் வில்வித்தையில் இந்திய அணியான அபிஷேக் வர்மா, ஓஜாஸ் தியோடேல் மற்றும் பிரதாமேஷ் ஜாவ்கர் தென்கொரிய அணியை வீழ்த்தி மற்றொரு தங்கத்தை உறுதி செய்தனர்.
இந்தியா தற்போது வரை மொத்தம் 83 பதக்கங்களை வென்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் பதக்கப் பட்டியல் விவரம்
- தங்கம் - 21
- வெள்ளி - 31
- வெண்கலம் - 32