ஒரே போட்டியில் பல சாதனைகள்; மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ODI தொடரை வென்ற இந்தியா
india won odi series vs west indies with multiple records: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ODI போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ODI தொடரை கைப்பற்றியுள்ளது.
ODI தொடரை வென்ற இந்தியா
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது ODI போட்டி நேற்று கௌகாத்தியில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 3 வீரர்களின் சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது.

406 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 43.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 407 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றியது.
சாதனைகள்
இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை இந்திய அணி மற்றும் வீரர்கள் படைத்துள்ளனர்.
407 ஓட்டங்கள் சேஸ் செய்தது, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு இதுவாகும்.
சர்வதேச ODI வரலாற்றில், 2006 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 438 ஓட்டங்களை எட்டியதே அதிகபட்சமாக உள்ளது.

406 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தும் போது, சுப்மன் கில் 223 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சேஸிங்கில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் குவித்த கிளென் மேக்ஸ்வெல்லின் (201 ) சாதனையை கில் முறியடித்தார்.
முதல்முறையாக ஒரு ODI போட்டியில், 5 வீரர்கள் சதமடித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜான் கேம்பெல், ஷாய் ஹோப், அமீர் ஜாங்கூ ஆகியோரும், இந்தியா தரப்பில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதம் விளாசியுள்ளனர்.
75 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்கள் குவித்த ரோஹித் சர்மா, இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம், ஒரு நாட்டில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ODI வடிவத்தில் 12,000 ஓட்டங்களை எட்டிய ரோஹித் சர்மா, சர்வதேச அளவில் 7வது துடுப்பாட்ட வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 3வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சச்சின் 300 இன்னிங்ஸில் 12,000 ஓட்டங்களை எட்டிய நிலையில், ரோஹித் சர்மா 282 இன்னிங்ஸில் இதனை எட்டி சச்சினை முந்தியுள்ளார். 242 போட்டிகளில் எட்டி கோலி முதலிடத்தில் உள்ளார்.
மேலும், இந்தியாவில் ODI சதமடித்த வயதான வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா(39) பெற்றுள்ளார். கபில்தேவ் 38 வயதில் இந்தியாவில் ODI சதமடித்ததே சாதனையாக இருந்தது.
117 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்த கில், இஷான் கிஷனின் (126 பந்துகள்) அதிவேக ஒருநாள் இரட்டை சத உலக சாதனையை முறியடித்தார்.
அணித்தலைவராக செயல்பட்டு டெஸ்ட் மற்றும் ODI ஆகிய 2 வடிவங்களிலும் இரட்டை சதம் விளாசிய உலகின் முதல் அணித்தலைவர் என்ற சாதனையை கில் படைத்தார்.
இந்த போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றிய குல்தீப் யாதவ், ODI கிரிக்கெட்டில் மொத்தமாக 200 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம், 200 ODI விக்கெட்களை கைப்பற்றிய 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
406 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி, 9வது முறையாக ODI போட்டிகளில் 400+ ஓட்டங்களை கடந்து தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்தது.