இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது, இதில் இலங்கை அணி டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்தியாவின் பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா இலங்கை இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 238 என்ற ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 446 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளது.
இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயரும், தொடர் நாயகன் விருதை ரிஷப் பண்ட்டும் தட்டிச்சென்றுள்ளனர்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸ்: 252-10
இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் :109-10
இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸ்: 303-9(d)
இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸ்: 208-10
இலங்கை வீரரை நேரில் சென்று வாழ்த்திய கோலி, டிராவிட்: ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டு!