ஜப்பானை முந்தி... உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா
ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சாதகமாக
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம், ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது என்றார்.
மேலும், நாம் நான்காவது பெரிய பொருளாதாரம் என்பதுடன், அது 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். IMF தரவை மேற்கோள் காட்டி, சுப்பிரமணியம் தெரிவிக்கையில் இன்று இந்தியா ஜப்பானை விடப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்றார்.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மனி மட்டுமே இந்தியாவை விடப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள். மேலும் திட்டமிடப்பட்டவற்றில் நாம் உறுதியாக இருந்தால், 2.5-3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேற முடியும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |