கொதிக்கும் சட்டியில் உட்கார வைக்கப்பட்ட சிறுவன்! வெளியான அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் சிறுவன் ஒருவன் கொதிக்கும் தண்ணீர் சட்டியின் உள்ளே உட்கார வைக்கப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்போர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாகவே வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வடமாநிலம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சுமார் 10 முதல் 15 வயதிற்குள்ளே இருக்கும் சிறுவன், கொதிக்கும் தண்ணீர் சட்டியில் உட்கார்ந்த படி கையை கூப்பி சாமி கும்பிட்டபடி உள்ளான்.
அந்த வடசட்டிக்கு கீழே அனல் பறக்கும் நெருப்பு, தண்ணீர் அப்படி கொதிக்கிறது என்று அங்கிருக்கும் பலரும் பார்த்து செல்ல, அதில் சிலர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
This is 2021 India ?? pic.twitter.com/iSE0xDeGgP
— Sandeep Bisht (@iSandeepBisht) September 7, 2021
இதைக் கண்ட இணையவாசிகள் இது ஒரு ஏமாற்று வேலை என்று அக்கு வேறா, ஆணி வேறாக ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அதில், இந்த வடசட்டி அருகே இருக்கும் பம்பு வழியாக் காற்று அனுப்பப்பட்டு, அந்த எண்ணெய் கொதிக்க வைக்கப்படுகிறது.
அதே சமயம் அந்த வடச்சட்டி இரண்டு லெயர் கொண்டது, ஒரு லெயர் முழுவதும், மஞ்சள், இலை என பலவற்றை போட்டு வைத்துவிட்டு, அதன் பின் மேலே எண்ணெய்யோ அல்லது தண்னீரையோ ஊற்றுவர்.
ஆனால் இதில் எண்னெய் மற்றும் தண்ணீர் கொதிக்காது. அப்படி தான் இதிலும், குறிப்பாக அந்த சிறுவன் அருகே மட்டும் தான் எண்ணெய் கொதிப்பதை பார்க்க முடியும்.
மற்ற இடங்களில் எண்ணெய் கொதிக்காது. அதற்கு காரணம், அந்த இடத்தில் தான் காற்று வரும் பம்ப் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இது போன்று தாய்லாந்தில் ஒரு புத்த துறவி இப்படி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.