பிரபல அமெரிக்கப் பல்கலையில் உரையாற்றிய இந்திய நடிகை
இந்திய நடிகையான கரிஷ்மா கபூருக்கு, பிரபல அமெரிக்கப் பல்கலையில் உரையாற்றும் கௌரவம் கொடுக்கப்பட்டது.
பிரபல அமெரிக்கப் பல்கலையில் உரை
பிரபல நடிகையும், நடிகை கரீனா கபூரின் அக்காவுமான கரிஷ்மா கபூர், அமெரிக்காவின் பாக்ஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலையின் Harvard Business Schoolஇல் உரையாற்றினார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் கரிஷ்மா கபூர் கலந்துகொண்டார்.
சினிமா வாயிலாக இந்தியாவை நோக்கி உலகைக் கவர்ந்திழுக்கும் ‘soft power’ of Bollywood என்னும் விடயம் குறித்து அவர் உரையாற்றினார்.
இதற்கிடையில், நிகழ்ச்சியின் நடுவே அவரது சகோதரியான கரீனா கபூரும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மொபைல் வாயிலாக ஒரு ஹலோ சொல்லிக்கொண்ட விடயமும் நடந்தது.
ஹார்வர்டு பல்கலையின் Harvard Business Schoolஇல் தான் உரையாற்றியது தொடர்பான புகைப்படங்களை கரிஷ்மா கபூர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |