களத்தில் இறங்கிய இந்திய விமானப் படை! சிங்கப்பூரிலிருந்து வரும் ஆக்சிஜன் கண்டெயினர்கள்
இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படை காலத்தில் இறங்கி ஆக்சிஜன் கண்டெயினர்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி நோயாளிகளுக்கு படுக்கை வழங்குவதற்கும், முதற்கட்ட சிகிச்சை அளிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விரைவாக ஆக்சிஜன் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், களத்தில் இறங்கியுள்ள இந்திய விமானப் படை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து ஆகிஜனை நிரப்புவதற்கான கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு சென்று நேரத்தை மிச்சப்படுத்திவருகிறது.
இதன் மூலம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்துக்கு ஆக்சிஜன்களை கொண்டு சேர்க்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து 4 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.
அதே போல், ஜேர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை இந்தியாவுக்கு கொண்டு வரஉள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அண்டை நாதூக்களா பாகிஸ்தான், சீனா மற்றும் தோழமை நாடுகளான அமேரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் ஆகிவை இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் மருத்துவ உதவிகளையும் அளிக்க முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.