ரஷ்யாவின் R-37 ஏவுகணையை இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம்
இந்திய விமானப்படை (IAF) தனது தாக்குதல் திறனை அதிகரிக்க புதிய ஏவுகணைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
அதில் குறிப்பாக ரஷ்யாவின் R-37 ஏவுகணையை தனது ஆயுத களஞ்சியத்தில் சேர்க்கும் முயற்சியில் உள்ளது.
ரஷ்யாவின் R-37 விமானத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 200 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய விமானப்படை BrahMos, Scalp, Rampage, Crystal Maze போன்ற ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இவை அனைத்தும் 200 கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரம் தாக்கும் திறன் கொண்டவை.
இந்திய விமானப்படை, DRDO நிறுவனத்திடம் Astra ஏவுகணையின் Long Range பதிப்புகளை உருவாக்குமாறு கோரியுள்ளது. அதாவது, புதிய பதிப்புகள் 200 கிலோமீட்டருக்கு மேல் தாக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டுமென கேட்டுள்ளது.
இந்திய விமானப்படை தனது தாக்குதல் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில், நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளை சேர்க்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Air Force missile upgrade, IAF eyes russian R-37 missile, russian R-37 Long range missile, russian R-37 missile India, Operation Sindoor Missiles