பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், ஜெய்சால்மர் அருகே உள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO-வின் சந்தன் Field Firing Range பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் மேலாளராக பணியாற்றிய மகேந்திர பிரசாத், பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ISI) ரகசிய தகவல்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகேந்திர பிரசாத், கடந்த 5 ஆண்டுகளாக DRDO விருந்தினர் இல்ல மேலாளராக இருந்துள்ளார்.
அவர் DRDO விஞ்ஞானிகள் மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகள் ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகளுக்காக வரும் சந்தன் Field Firing Range அருகே பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் ISI-க்கு சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக இரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது மொபைல் ஃபோன் பரிசோதனையில், அவருக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது, உத்தியோகபூர்வ ரகசியங்கள் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோதனை மையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பொது இடங்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் தாங்கும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்பார்க்கப்படும் தீவிரவாத மற்றும் உளவுத்துறை அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
DRDO guest house manager arrested, Jaisalmar Spying case, DRDO manager spying for pakistan, Indian missile secrets leak, Mahendra Prasad, Official Secrets Act 1923