6,000 மீற்றர் உயரத்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர்கள் இருவர் 6,000 மீற்றர் உயரத்தில் உள்ள மலைச்சிகரம் ஒன்றில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
6,000 மீற்றர் உயரத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப்பயணிகள்
அமெரிக்கரான Michelle Theresa Dvorak என்பவரும், Fay Jane Manners என்னும் பிரித்தானியரும் இந்தியாவிலுள்ள Chaukhamba III என்னும் மலைச்சிகரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சிகரத்தை அடையும் முயற்சியின்போது, 6,015 மீற்றர் உயரத்தில் அவர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்களைத் தேடும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
Chamoli, Uttarakhand: The rescue operation for two climbers, one from the USA and one from the UK, trapped on Mount Chaukhamba concluded successfully after 80 hours. Conducted by the Indian Air Force, SDRF, NDRF, Army, and local administration, the operation began on October 4,… pic.twitter.com/iJxgKUAh0A
— IANS (@ians_india) October 6, 2024
இந்திய விமானப்படை ஹெலிகொப்டர்களுடன், மலையேற்ற சிறப்பு பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினரும் சனிக்கிழமை இணைந்து தேடுதல் பணிகளை மும்முரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை Michelleம் Fay Janeம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக Indo-Asian News Service என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |