ஒற்றுமைக்காக குரல் கொடுத்த இந்திய தூதருக்கு சீக்கிய ஹீரோ விருது!
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்ட இந்திய தூதருக்கு, அமெரிக்காவில் வாழும் சீக்கிய மக்கள் ”சீக்கிய ஹீரோ விருது” வழங்கியுள்ளனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்
பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகளை கைது செய்ததை அடுத்து உலக நாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகத்தை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் காலிஸ்தான் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் கனடாவில் காந்தி சிலையை சேதப்படுத்தியதோடு, அங்குள்ள ஒரு இந்து கோவிலின் சுவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
@pti file
இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய தூதரான தரண்ஜீத் சிங்கின் கார் கண்ணாடியை உடைப்பதாக கூறி அவரை மிரட்டியுள்ளனர்.
சீக்கிய ஹீரோ விருது
இந்த நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்துவுக்கு(tharan singh sandhu) அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சேர்ந்து ”சீக்கிய ஹீரோ” வழங்கி கவுரப்படுத்தியுள்ளனர்.
@twitter
பிரிவினைவாதிகளுக்கு எதிரான ஒரு வலுவான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
@twitter
”பொற்கோவிலில் பறந்து கொண்டிருக்கிற கல்சா கொடியானது, ஒற்றுமை, அமைதி மற்றும் பிரபஞ்சத்தின் அன்புக்கானது. இந்த அடையாளம் பயன்படுத்தப்படலாம். ஆனால், அது புண்படுத்தப்பட கூடாது” என காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயலை சுட்டிக்காட்டுவது போல் தரண்ஜீத் சிங் சந்து பேசியுள்ளார்.
Delighted to receive Hero Award from Sikhs of America. Spoke about imp tenets of Sikhism: seva, brotherhood, equality, inclusion & honesty.
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) April 9, 2023
Highlighted the strengthening of ?? ?? p’ship & tech/ infra transformation taking place in India & huge opportunities for the youth. pic.twitter.com/octAi2ZNTU
சீக்கிய மக்களின் ஒற்றுமைக்காக போராடி வரும் தரண்ஜீத் சிங் சந்துவிற்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து, உலகிலுள்ள சீக்கிய மக்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.