தமிழ் வம்சாவளி அமெரிக்கரின் புதிய முயற்சி., தனியார் தீவை புதிய டெக் நாடாக உருவாக்க திட்டம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் தனியார் தீவு ஒன்றை வாங்கி அதனை புதிய தொழில்நுட்ப நாடாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
தொழிலதிபர் பாலாஜி சீனிவாசன், சிங்கப்பூர் அருகேயுள்ள ஒரு தனியார் தீவை வாங்கி, “Network State” என்ற புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான நாடு ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நிக் பீட்டர்சன் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், தற்போது அங்கு நடைபெறும் “Network School” என்ற மூன்று மாத பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு, அந்த தீவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
யார் இந்த பாலாஜி சீனிவாசன்?
பாலாஜி சீனிவாசன் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மருத்துவத்துறையைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார்.
இவர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் BS, MS மற்றும் PhD பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவர் Counsyl நிறுவனத்தை நிறுவியதுடன், Coinbase நிறுவனத்தில் CTO-வாகவும், Andreessen Horowitz வினைச்சிறந்த முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்.
பாலாஜி சீனிவாசனின் Network State என்ற கனவு
Network State - இது ஒரு டிஜிட்டல் மையமுடைய, பரிணாமமடைந்த, சுயாட்சி நாடு.
தொழில்நுட்பம், கிரிப்டோகரன்சி, ஆரோக்கியம், கல்வி மற்றும் தனி சுதந்திரத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற ஒரே எண்ணத்துடன் இருப்பவர்களை ஒன்றிணைக்கும் சமூக நாடு.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாகவே, Network School என்ற பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இது 2024-ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கப்பட்ட மூன்று மாத நேரடி பயிற்சித் திட்டம்.
இதில் பங்கேற்கும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தலைவர்கள், தொழில்முனைவோர், உடற்பயிற்சி ஆவலர்கள் உள்ளிட்டோர் ஒரே தளத்தில் ஒன்று கூடுகின்றனர்.
“பிட்காயின் சக்தியால் நாங்கள் ஒரு தீவை பெற்றுவிட்டோம்... இப்போது நாங்கள் அங்கு புதிய உலகத்தை உருவாக்க இருக்கிறோம்” என பாலாஜி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
பலாஜி ஸ்ரீநிவாசன், அமெரிக்க தொழிலதிபர், Balaji Srinivasan tech nation island, Network State island near Singapore, Indian entrepreneur new country, Tech utopia island Singapore, Balaji Srinivasan Network School, Network State digital nation, Crypto community private island, New nation by Indian-American, Future of governance Network State, Decentralized state tech initiative