இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த சீக்கியர்: அமெரிக்காவில் நிகழ்ந்த கொடூரம்
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர், விடுமுறைக்காக தன் மனைவியுடன் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அமெரிக்கர் ஒருவரால் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால், அவரது குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
நடுரோட்டில் தாக்கப்பட்ட இந்தியர்
கடந்த வியாழனன்று, மருத்துவரைக் காண தன் மனைவியை அழைத்துச்சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் Jasmer Singh (66).
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கார் கில்பர்ட் (Gilbert Augustin, 30) என்பவரது கார் மீது மோதியுள்ளது. உடனடியாக காரிலிருந்து இறங்கிய கில்பர்ட், பொலிசாரை அழைக்காதே என்று சத்தமிட்டபடி, சிங்குடைய மொபைலைப் பறித்துள்ளார்.
ABP LIVE - ABP News
காரிலிருந்து இறங்கிய சிங் அவரைப் பின்தொடர, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சட்டென தனது மொபைலைப் பிடுங்கிய சிங் தன் காருக்குத் திரும்ப, பின்னாலேயே வந்த கில்பர்ட், சிங் முகத்திலும் தலையிலும் மூன்று முறை குத்தியிருக்கிறார்.
கீழே விழுந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அவரது மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக மறுநாள் சிங் உயிரிழந்துவிட்டார்.
Jasmer Singh loved his city and deserved so much more than his tragic death. On behalf of all New Yorkers, I want our Sikh community to know you have more than our condolences. You have our sacred vow that we reject the hatred that took this innocent life and we will protect you. pic.twitter.com/JvhhmDJ9v2
— Mayor Eric Adams (@NYCMayor) October 22, 2023
இனவெறுப்புக் குற்றச்சாட்டு
சிங்குடைய மகனான முல்தானி (Multani), கில்பர்ட் தன் தந்தையை தாக்கியதில் அவரது பற்கள் இரண்டு விழுந்துவிட்டதாகவும், மண்டை ஓடு உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
என் தந்தையின் தலைப்பாகை, உடை ஆகியவற்றை குறித்து அந்த நபர் விமர்சித்தார் என்று கூறும் முல்தானி, ஒரு மனிதரை அப்படி கடுமையாக தாக்கவேண்டிய அவசியமில்லை, இது இனவெறுப்புக் குற்றம் என்கிறார்.
சிங் தன் மனைவியுடன் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார் அவர். இந்நிலையில், தன் கண் முன்னே தன் கணவர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதால் சிங்கின் மனைவி கடுமையாக மன ரீதியாக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கில்பர்ட்டை ஜாமீனில் விடக்கூடாது என நீதிபதி Danielle Hartman உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |