இலங்கையில் 3வது பெய்லி பாலத்தை..வெற்றிகரமாக கட்டி முடித்த இந்திய இராணுவம்
இலங்கையின் பி-429 நெடுஞ்சாலையில் இந்திய இராணுவம் மூன்றாவது பெய்லி பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
பெய்லி பாலங்கள்
யாழ்ப்பாணம் மற்றும் கண்டிப் பகுதிகளில் இரண்டு பெய்லி பாலங்கள் அமைக்கப்பட்டன.
X/adgpi
அதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவப் பொறியாளர்கள் இலங்கையின் பி-429 நெடுஞ்சாலையில் 15 கிலோ மீற்றர்கள் தொலைவில், 120 அடி நீளமுள்ள மூன்றாவது பெய்லி பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்து இந்திய இராணுவம் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மீட்டெடுப்பு
இந்தப் பாலமானது மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களை மீண்டும் இணைகிறது.
முன்னதாக, தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவினால் இந்த போக்குவரத்துப் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துண்டிக்கப்பட்டிருந்த ஒரு முக்கியப் போக்குவரத்துப் பாதையை இந்தப் பாலம் மீட்டெடுத்துள்ளது.
இந்திய இராணுவத்தின் பொறியியல் நிபுணத்துவத்தை காட்டும் வகையிலும், இயற்கை பேரிடர் காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
newsonair.gov.in
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |