பிரித்தானிய அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை: இந்திய கலைப்பொருட்களும் மாயம்
இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து 600க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை
இங்கிலாந்தின் பிரிஸ்டலிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகிவருகின்றன.

அந்த அருங்காட்சியகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களில், காலனி ஆதிக்கத்தின்போது இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் அடங்கும்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார், குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.
இந்த கொள்ளை நடந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், எதனால் இப்போது இந்த CCTV காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளார்கள் என்பது தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |