கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த பொருள்; என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா?
மிகச்சிறிய பொருட்களை உருவாக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். உலகின் மிகச்சிறிய மரக் கரண்டியை தயாரித்து இந்திய கலைஞர் சஷிகாந்த் பிரஜாபதி உலக சாதனை படைத்துள்ளார்.
மர கரண்டிகளை உருவாக்குவது எளிது. ஆனால் சிறிய மர கரண்டியை உருவாக்குவைது அது எளிதல்ல. ஆனால், அவர் அதை எப்படி செய்தார்?
பீகாரை சேர்ந்த 25 வயது கலைஞர் ஷஷிகாந்த் பிரஜாபதி, உலகின் மிகச்சிறிய மர கரண்டியை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். 2022-ஆம் ஆண்டில், நவரதன் பிரஜாபதி மூர்த்திகரின் 2 மிமீ (0.07 அங்குலம்) சாதனையை முறியடித்த சசிகாந்த் பிரஜாபதி வெறும் 1.6 மிமீ (0.06 அங்குலம்) அளவைக் கொண்டு பழைய சாதனையை முறியடித்தார்.
Guinness World Record
உலக சாதனையை முறியடித்த பிறகு, சஷிகாந்த் பிரஜாபதி கின்னஸ் உலக சாதனையிடம் கூறியதாவது, பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த மர கரண்டியை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்தேன். தயாரிக்கும்போது பலமுறை தோல்வியடைந்தேன். 99 சதவீதம் முடிக்கப்பட்டு உடைந்துபோனது. அதை மீண்டும் புதிதாக உருவாக்க வேண்டியிருந்தது.
New record: Smallest wooden spoon - 1.6 mm achieved by Shashikant Prajapati (India) ?
— Guinness World Records (@GWR) August 7, 2023
A hotly contested record changes hands again, for the fourth time in three years! ? pic.twitter.com/5k446DoiY7
2020-ஆம் ஆண்டில், சஷிகாந்த் பிரஜாபதி பென்சில் ஈயத்திலிருந்து அதிக சங்கிலி இணைப்புகளை (மொத்தம் 126 இணைப்புகளுடன்) செதுக்கியதற்காக கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்றார்.
2021-ல் 236 இணைப்புகளுடன் இந்த சாதனையை இரண்டு முறை முறியடித்தார். ஆனால் இந்தியாவின் கவியரசன் செல்வம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 617 இணைப்புகளை செதுக்கி சசிகாந்த் பிரஜாபதியின் சாதனையை முறியடித்தார்.
Guinness World Record
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
world’s smallest wooden spoon, Shashikant Prajapati, wooden spoon, 1.6 mm wooden spoon, Guinness World Record