முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது
பிரித்தானியாவில் பணியாற்றி வந்த நபர் தமது முன்னாள் மனைவி மற்றும் அவரது மொத்தக் குடும்பத்தையும் படுகொலை செய்ய திட்டமிட்டு, கைதாகியுள்ள நிலையில், தற்போது நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஒன்பது கூலிப்படையினர்
46 வயதான அஜித் குமார் முப்பரபு, புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சிரிஷா என்பவருடன் பெர்க்ஷயரில் வசித்து வந்தார். ஆனால், திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-ல் டாக்டர் சிரிஷா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ஐதராபாத்தில் தனது முன்னாள் மனைவியையும் அவரது உறவினர்களையும் கொலை செய்வதற்காக, அஜித் குமார் தனது சொந்த ஊரில் இருந்து ஒன்பது கூலிப்படையினரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, விஷம் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, மரணமடைந்த தனது முன்னாள் மாமியார், 60 வயதான உமா மகேஸ்வரியைக் கொலை செய்ததாகவும் அஜித் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்படுவதை
அத்துடன், தனது சகோதரி சுரேக் முப்பரபுவுடன் சேர்ந்து, தனது முன்னாள் மனைவி டாக்டர் சிரிஷா, அவரது சகோதரர் எம். பூர்ணேந்தர், அவரது மனைவி சசிரேகா மற்றும் அவரது தந்தை ஹனுமந்த ராவ் ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அஜித் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள சில சொத்துக்கள் தொடர்பாக அவருக்குத் தன் மாமனாரோடு ஒரு மனக்குறை இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பிடியாணையை நிறைவேற்றச் சென்ற நாடுகடத்தல் பிரிவு அதிகாரிகளால், அஜித் குமார் கடந்த ஆண்டு ஜனவரி 17 அன்று மெய்டன்ஹெட்டில் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் அவர், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |