சுவிட்சர்லாந்தில் வாழும் இந்திய கோடீஸ்வரரின் மகள்: எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்
இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வாலின் மகளான வசுந்தரா ஓஸ்வால், சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் தான் இனவெறுப்பை எதிர்கொண்ட விடயம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இந்திய கோடீஸ்வரரின் மகள் எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்
இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகளான வசுந்தரா (27) சுவிட்சர்லாந்தில் 8 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்.
புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட அவரது வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 1,649 கோடி ரூபாய் ஆகும்.
வசுந்தராவின் வீடு, சுவிட்சர்லாந்திலேயே பெரிய வீடுகளில் ஒன்று என்ற பெருமைக்குரிய வீடாகும்.

ஆனால், அதுவே பலருக்கு பொறாமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறும் வசுந்தரா, சமீபத்தில், வசுந்தரா வீட்டு தோட்டக்காரர் புல் வெட்டும் கருவியை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து அதை நிறுத்துமாறு சத்தமிட்டதாக தெரிவிக்கிறார்.
சுவிட்சர்லாந்தில் வியாழக்கிழமையில், அதுவும் பகல் நேரத்தில் புல் வெட்டும் கருவியை பயன்படுத்த அந்த தடையும் கிடையாது.
அதை அந்த நபருக்கு பொறுமையுடன் விளக்கியும், இது ஒன்றும் இந்தியா அல்ல என அவர் கத்த, அவரது இனவெறுப்பு தெளிவாகவே தெரிகிறது.

இந்நிலையில், இப்படிப்பட்ட சம்பவங்களை தங்கள் குடும்பம் பலமுறை எதிர்கொண்டதாகவும் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள வசுந்தரா, இப்படிப்பட்ட இனவெறுப்பு சம்பவங்கள் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும்தான் நடப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், இது நடப்பது சுவிட்சர்லாந்தில் என்று கூறும் வசுந்தரா, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் 17 சதவிகிதம் பேர் இதுபோல் இனவெறுப்பை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |