30 வயதில் ரூ.100 கோடி நிறுவனம்! junk foods இல்லாத இந்தியா: அழகிய இளம்பெண் விடாமுயற்சி
அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் பார்த்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவில் தொழில் தொடங்கிய அழகிய இளம் பெண்ணான அஹானா கௌதம்(Ahana Gautam) இன்று 100 மதிப்பிலான நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் Bharatpur மாவட்டத்தை சேர்ந்த அஹானா கௌதம்(Ahana Gautam) மும்பை ஐஐடியில் (IIT Bombay) இரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
மேலும் 2014ம் ஆண்டு முதல் 2016 வரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் (Harvard Business School) MBA பட்டம் பெற்றார். அதே சமயம் Godrej Tyson Foods Limited நிறுவனத்தில் சுயாதீன வாரிய இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்த காலகட்டத்தில் அதிக எடையுடன் இருந்த அஹானா, அமெரிக்காவில் உள்ள உணவு தின்பண்ட கடை ஒன்றுக்கு சென்று இருந்த போது, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார்.
ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?
Procter and Gamble (P&G) நிறுவனத்தில் 4 வருடங்கள் வேலை பார்த்து வந்த அஹானா கெளதம் தொழில் தொடங்கும் திட்டத்துடன் இந்தியாவுக்கு திரும்பினார்.
அஹானா கெளதமின் Open Secret நிறுவனம்
தன்னுடைய 30 வயதில் தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பிய அஹானா கெளதம் Open Secret என்ற நிறுவனத்தை 2019ம் தொடங்கினார்.
ஆரம்பத்தில் தனது தாயிடம் இருந்து பணம் வாங்கிய நிறுவனத்தை தொடங்கிய அஹானா, இன்று Open Secret என்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடி என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளார்.
அஹானா கெளதம் இந்தியாவில் செயற்கை நிறங்கள், சுவை கூட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை அதிக அளவு கொண்ட junk food-களை குறைத்து ஆரோக்கியமான தின்பண்டங்களை(healthily snacks) விற்பனை செய்ய வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |