நேபாளத்தின் மலைப்பிரதேசத்தில் இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தொடரும் தேடுதல் வேட்டை
நேபாளத்திலுள்ள உயரமான சிகரமான மவுண்ட் அன்னபூர்னா சிகரத்திற்கு சென்ற இந்திய மலையேற்ற வீரர் மாயமாகியுள்ளார்.
மலையேற்ற வீரர் மாயம்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் (Anurag maloo) அனுராக் மாலு (34). மலையேற்ற வீரரான இவர் தொடர்ந்து நிறைய சிகரங்களை ஏறி சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி வரை அவர் தங்கியிருந்த முகாமிற்கு திரும்பவில்லை. எனவே அச்சமடைந்த அவரது நண்பர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தொடரும் தேடும் வேட்டை
இந்நிலையில், நேபாள சிகரத்தில் மாயமான அனுராக் வேலுவைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
8,000 மீட்டருக்கு மேல் உள்ள 14 சிகரங்களையும், ஏழு உச்சி மலைகளையும் ஏறும் பணியில் மாலு ஈடுபட்டுள்ளதாக ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
"மாலு காணாமல் போன சிறிது நேரத்திலேயே நாங்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டோம். இருப்பினும், மாலை வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, செவ்வாய்கிழமையும் தேடுதலை தொடருவோம்," என்று ராணுவ அதிகாரி ஹெர்பா கூறியுள்ளார்.
அனுராக் மாலுவுக்கு REX கரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும் அவர் அண்டார்டிக்கின் இளம் இந்திய தூதர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.